ண்டோரியா

நேற்று கனடா மற்றும் அமெரிக்காவில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்துள்ளது.

சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது உண்டாகிறது.   இந்த கிரகணத்தின் போது நிலவு நகர நகர சூரியன் சிறிது சிறிதாக மறைந்து அதன் பிறகு மீண்டும் சிறிது சிறிதாக தெரிய ஆரம்பிக்கும்.  பூமியில் இருந்து சந்திரன் வெகு தூரம் இருக்கும் போது இந்த கிரகணம் தோன்றினால் அப்போது சூரியன் ஒரு வளையம் போல் தெரியும்.  இதுவே நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஆகும்.

நேற்று சூரிய கிரகணம் நிகழ்ந்தது.  இதில் கனடா, ஐரோப்பா, ஆசியா மற்றும் வட ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரியும் என நாசா அறிவித்திருந்தது.  அதன்படி நேற்று கனடாவில் ஒண்டோரியா மாகாணம் மற்றும் வடக்கு அமெரிக்காவில் வளைய சூரிய கிரகணம் தெரிந்தது.  இதைச் சிறப்புத் தொலை நோக்கி மூலம் சூரிய கிரகணத்தை பலர் கண்டனர்.

இதைப் போல் நார்வேயின் ஓஸ்லோ, இங்கிலாந்தின் ஸ்கார்பரோ பகுதியிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்ததால் அதை பொதுமக்கள் சிறப்புத் தொலை நோக்கி மற்றும் சூரிய கிரகண கண்ணடி மூலம்  பார்த்தனர்.  மேலும் தென் மேற்கு ஜெர்மனி, அமெரிக்காவில் நியூஜெர்சி, லண்டன், கிரீன்லாந்து, வடக்கு ரஷ்யாவிலும் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தெரிந்தது.

இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணி முதல் மாலை 6.41 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் எனவும் முழு வளைவு கிரகணம் 3 நிமிடங்கள் 51 நொடிகள் நீடிக்கும் எனக் கூறப்பட்டது.  இந்தியாவில் அருணாசலப் பிரதேசம் மற்றும் லடாக்கில் சூரியன் அஸ்தமிக்கும் போது சூரிய கிரகணம் தெரிந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.