நம் ஊர் ஏ.டி.எம்.களில் பணம் கொட்டும்.
ஆனால் வியட்நாம் நாட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் அரிசி கொட்டுகிறது.
கொரோனா காரணமாக அந்த நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான ஆலைகள் மூடப்பட்டு விட்டன.
ஏழை தொழிலாளர்கள் உணவுப்பொருட்கள் இல்லாமல், பசி, பட்டினியால் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இளகிய மனம் கொண்ட ஹோங்க் தூன் என்ற வணிகர், அந்த அப்பாவி ஜீவன்களுக்கு உதவ முடிவு செய்தார்.
அதன் விளைவாக அங்குள்ள ‘ஹோசிமின்’ நகரில் அரசி வழங்கும் ஏ.டி,எம், எந்திரத்தை வடிவமைத்தார்.
ஏழைகள் அந்த ஏ.டி.எம்.முக்கு சென்று- வழக்கமாக பணத்தை கொட்டும் துவாரத்தில், பையை நீட்டினால், அரிசி கொட்டும்.
ஒரு நபருக்கு ஒன்றரை கிலோ அரிசி கிடைக்கும் வகையில், அந்த ஏ.டி.எம்.மில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
24 மணி நேரமும் இந்த அரிசி ஏ.டி.எம்.கள் இயங்கும்.
இது போன்ற ஏ.டி.எம். எந்திரங்கள் ஹனோய், ஹு உள்ளிட்ட நகரங்களிலும் நிறுவப்பட்டுள்ளன.