ஹொனாய்

கிழக்காசிய நாடான வியட்நாமில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், வேலையிழந்து பசியுடன் இருப்பவர்களுக்கு ஏடிஎம் இல் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது.

வியட்நாமில் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வேலையிழப்பு ஏற்பட்டு, தினக்கூலிகள் உணவிற்காக மிகவும் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பசித்திருக்கும் மக்களுக்காக அரசு, தன்னார்வலர்கள் உதவியோடு  அரிசி ஏடிஎம் தொடங்கியுள்ளது.

இதில் ஒருவருக்கு 1.5 கிலோ அரிசி கிடைக்கும். ஏடிஎம் மையத்தில் 6 அடி இடைவெளியில் வரிசையாக நின்று அரிசியை வாங்கிக் கொள்ளலாம்.

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஏடிஎம் செயல்படும். நாட்டின் மிகப் பெரிய நகரான ஹோசிமின் சிட்டியில் மட்டும் 24 மணி நேரமும் அரிசி ஏடிஎம் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு சூழலில் மக்களின் அடிப்படை தேவையை நேர்த்தியாக நிறைவேற்றும் வியட்நாம் அரசு உலகிற்கே வழிகாட்டுகிறது.