பூஞ்ச்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் உள்ள குருத்வாராவில் வழிபாடு நிகழ்த்தி உள்ளார்.

கடந்த மாதம் 22ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய்ச் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 7 ஆம் தேதி இதற்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதனால், இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகி இவ்விரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தின., 3 நாட்கள் மோதலுக்குப்பின் ஒப்பந்த அடிப்படையில் 10ம் தேதி மோதல் முடிவுக்கு வந்தது.
நேற்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஜம்மு-காஷ்மீர் சென்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அவர் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சீக்கியர்களின் புனித்தலமான குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.