டாக்டர். அரவிந்தர் சிங் சோயின் – முன்னணி கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர், மெடந்தாவில் கொரோனாவிற்கு எதிரான, பல மைய சோதனைகளின் மேற்பார்வையாளர், வணிக முதலீட்டாளர், மத்திய அரசின் சுகாதாரத் துறையின் திருத்தப்பட்ட கொரோனா மருத்துவ மேலாண்மை வழிமுறைகளை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை, திருத்தப்பட்ட COVID-19 மருத்துவ மேலாண்மை நெறிமுறைகளை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில் இணைக்கப்பட்டுள்ள சில கூடுதல் திருத்தங்கள் இங்கே பகிரப்படுகிறது. ரெம்டெசிவிர் & டோசிலிசுமாப் (Remdesivir & Tocilizumab) ஆகியவை, மிதமான நோய்வாய்ப்பட்ட மற்றும் கடுமையாக பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு மருந்துகள் சார்ந்த சிகிச்சையாக அளிக்க பரிந்துரைக்கப்படுகின்றன. அவற்றின் பயன்பாடு இன்னும் ஆய்வில் உள்ளது என்பதும், அதனால் கொரோனா தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். வெறுமனே, நோய்தொற்றின் கடுமையைக் குறைக்கலாம் என்றும், குணமடைதல் காலத்தை விரைவுப்படுத்தும் என்பதும் அதன் மீதுள்ள நம்பிக்கையளிக்கும் செய்தியாகும்.
ரெம்டெசிவிர் (Remdesivir)
COVID-19 க்கான Remdesivir பயன்பாட்டின் மீது செய்யப்பட இதுவரையிலான ஆய்வுகளில், 2 கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மட்டுமே குணமடைதல் காலம் குறைவதைக் காட்டியுள்ளது. இருப்பினும், கூடுதல் உயிர்கள் எதுவும் காப்பாற்றப்படவில்லை.
Tocilizumab – பைப் பொறுத்தவரை, தற்போதைய பல மைய தேசிய சோதனைகள் , இதன் தரம் மற்றும் செயல்படும் தன்மையைப் பற்றிய தகவல்களை அளிக்கக்கூடும். நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு COVID-19-இல் இருந்து குணமடைந்த நபர்களிடமிருந்து பிளாஸ்மா பெற்று பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இது தீவிர கண்காணிப்பின் கீழ் செய்யப்படுவது மிகவும் அவசியமாகும். மேலும், பிளாஸ்மா நன்கொடையளிக்கும் நபரின் பிளாஸ்மாவில் போதுமான வைரஸ்களை செயலிக்கச் செய்யும் ஆன்டிபாடிகள் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். (≥1: 160 டைட்டர்). மேலும் போதிய அளவு பிளாஸ்மாவும் கிடைக்கப்பட வேண்டும். அதே சமயம் இந்த சிகிச்சையில் கிடைக்கும் முன்னேற்றம் உலகளாவியதல்ல. ஆளுக்கு ஆள் மாறுபடலாம்.
சிக்கலான நோயாளிகளில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) பயன்பாட்டைத் தவிர்ப்பதற்கான பரிந்துரை வரவேற்கத்தக்கது. பல மாதங்கள் கண்மூடித்தனமான பயன்பாடு மற்றும் கட்டுப்பாடற்ற மிகைப்படுத்தப்பட்ட எதிர்ப்பார்ப்புகளுக்கு பிறகு, நோயின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு இது மிகச் சிறந்த நன்மையைத் தரக்கூடும் என்பது தெளிவாகிறது. HCQ க்கு சாதகமான ஆய்வு முடிவுகள் தற்போது காணக் கிடைக்கிறது. HCQ வின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி காரணமாக, ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் மற்றும் பிளாஸ்மா சிகிச்சையின் பயன்பாட்டை மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதியாக நிரூபிக்கும் வரை, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் சிறந்த மாற்றாக HCQ இருக்கலாம்.
தமிழில்: லயா