சென்னை: தமிழ்நாட்டில் சத்துணவு பணியில் ஈடுபட்டு வரும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் மாணாக்கர்களுக்கு மதிய உணவுத் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. காமராஜார் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்ததிட்டம், பின்னர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், மேலும் மெருகூட்டப்பட்டு சத்துணவு திட்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 29,137 சமையலர்கள் 24,576 சமையல் உதவியாளர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.