உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் மாணவ பயிற்சி (Interns) வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்திற்குள் பயிற்சி வழக்கறிஞர்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (Supreme Court Bar Association “SCBA”) வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயிற்சி வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறைகள், தாழ்வாரங்கள், நூலகங்கள், காத்திருக்கும் பகுதிகள் என அனைத்தையும் ஆக்கிரமிப்பதால் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு இடையூறாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பயிற்சி வழக்கறிஞர்கள் இதர வழக்கு விசாரணை நடைபெறும் திங்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்ற வளாகத்திற்குள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான வழக்கு விசாரணை நாட்களான புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.