சென்னை: மக்கள் கூட்டம்  அதிகமாக உள்ள தி.நகர் ரங்கநாதன் தெருவை ஆக்கிரமித்துள்ள  சாலையோர கடைகளை சென்னை மாநகராட்சி அதிரடியாக அகற்றி நடவடிக்கை எடுத்தது.

சாலையோர கடைகளால், வணிக நிறுவனங்களும், அந்த தெருவில் குடியிருந்து வரும்  பொதுமக்களுக்கும் கடுமையான இடர்பாடுகள் ஏற்பட்டு வந்த நிலையில், பகுதியில் உள்ள தங்களது வீடுகளுக்கு செல்லவே முடியாத நிலை உள்ளதாக, ஏராளமான புகார்கள் எழுந்தன. பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து,  ரங்கநாதன் தெருவில் இருந்து 40 தெரு வியாபாரிகளை  சென்னை மாநகராட்சி அதிரடியாக அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளது.

தி. நகரின் ரங்கநாதன் தெருவில்  நடைபாதைகளை விரிவுபடுத்தவும், பாதசாரிகள் போக்குவரத்தை மேம்படுத்தவும் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த  அங்கீகரிக்கப்படாத கடைகளை அகற்றியது.   ரங்கநாதன் தெருவில் உள்ள சுமார் 40 அங்கீகரிக்கப்படாத தெரு வியாபாரி கடைகளை செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சி அகற்றியது.

இந்த தெரு ரயில் நிலையத்திற்கு செல்லும் வழி என்பதால், ஏராளமானோர் காலை, மாலை இந்த வழியை உபயோகப்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால், நாளுக்கு நாள் இந்த தெருவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்ததால், பொதுமக்கள் நடமாடுவதற்கே கடுமையான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், அந்த பகுதியில்  உள்ள குடியிருப்புவாசிகள், தெரு ஆக்கிரமிப்புகள் காரணமாக  தங்களது விடுகளுக்கே செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதுதொடர்பாக காவல்துறை மற்றும் மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வெந்தன.

இதையடுத்து, நடைபாதை பகுதியை விரிவுபடுத்தவும், தெருவில் நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி, சாலையோர கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன. மேலும், இதுதொடர்பாக, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்ளவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது, மேலும் நடைபாதை ஆக்கிரமிப்புகள் குறித்த குடிமை அமைப்பின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

[youtube-feed feed=1]