ஐதராபாத்:
பணமதிப்பிறக்க அறிவிப்பு பிறகு எவ்வளவு புதிய ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது என்ற விபரம் இல்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பையை சேர்ந்த அனில் கல்காலி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள விபரம்:
கடந்த நவம்பர் 9ம தேதி முதல் 19ம் தேதி வரை அச்சிடப்பட்ட 10, 20, 50, 100, 2000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு அச்சிடப்பட்டது.
இதற்கு தங்களிடம் தகவல் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ரூபாய் நோட்டுக்கள் பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது.
இதற்கு உத்தரவுகள் நேரடியாக அச்சகங்களுக்கு சென்றுவிட்டது. அதனால் இந்த கேள்விகள் அந்த அச்சகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி பதிலில் தெரிவித்துள்ளது.
தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் செலவுக்காக ஆளும் கட்சியான பாஜ அதிகளவில் பணத்தை குவித்துள்ளது. அதனால் புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் விபரம் கேட்கப்பட்டுது. ஆனால் இதற்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது.
ஒரு தனி நபரை பாதிக்கும் அல்லது வாழ்க்கையை அழிக்க உதவும் தகவல்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க தேவையில்லை. ஆனால் இது போன்ற தகவல்களை ரிசர்வ் வங்கி அளிக்க மறுக்கிறது என்று தேசிய பேரழிவு மேலாண்மை ஆணைய முன்னாள் துணைத தலைவர் மாரி சசீதர ரெட்டி தேர்தல் கமிஷனுக்கு புகார் அளித்துள்ளார்.