புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த விரர்களுக்கு ரூ.110 கோடியை நன்கொடையாக மும்பையை சேர்ந்த விஞ்ஞானி வழங்கியுள்ளார்.
கடந்த மாதம் 14ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது.
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு மத்திய, மாநில அரசுகள், பிரபலங்கள் என அனைவரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து கொள்வதுடன் அவர்களின் குடும்பத்திற்கு வேண்டிய நிதியுதவியை அளித்து வருகின்றனர். அந்த வகையில், மும்பையை சேர்ந்த தொழிலதிபரான மோர்டஜ எ.ஹமித் என்பவர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு உதவ ரூ.110 கோடியை நன்கொடையாக அளித்துள்ளார்.
ஹமித் இந்த தொகையை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ராஜஸ்தானில் பிறந்து வளர்ந்த ஹமித் தற்போது மும்பையில் ஆராய்ச்சியாளராகவும், விஞ்ஞானியாகவும் பணியாற்றி வருகிறார். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு உதவுவது தொடர்பாக கடந்த 27ம் தேதி பிரதமர் மோடிக்கு ஹமித் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த தொகையை மத்திய அமைச்சர் நிதின் கட்காரியிடன் அளிக்கப்பட்டுள்ளது. தன் உயிரை கொடுத்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்காக இந்த தொகையை கொடுப்பதில் பெருமிதம் அடைகிறேன் என மோர்டஜ எ.ஹமித் தெரிவித்துள்ளார்.