மும்பை
ரிபப்ளிக் டிவி டி ஆர் பி ஊழல் வழக்கு விசாரணையை சி பி ஐக்கு மாற்றுவது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்ட ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சி சேனல்கள் மக்களுக்கு பணம் அளித்ததாக மும்பை காவல்துறை தகவல் அளித்தது. இது குறித்து மும்பை காவல்துறை விசாரணையை தொடங்கியது இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை எழுந்தது.
ஆனால் மகாராஷ்டிர அரசு சிபிஐ விசாரணைக்கு அளித்துள்ள பொது அனுமதியை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் ரிபப்ளிக் டிவி உரிமையாளரான ஏ ஆர் ஜி அவுட்லியர் மீடியா லிமிடெட் என்னும் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை அளித்தது. அந்த மனுவில் மும்பை காவல்துறையினர் விசாரணைக்கு தடை விதிக்கவும் இந்த் வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றவும் கோரிக்கை விடப்பட்ட்டது.
ரிபப்ளிக் டிவி வழக்கை நீதிபதிகள் ஷிண்டே மற்றும் கார்னிக் ஆகியோரின் அமர்வு விசாரித்து வருகிறது. மும்பை காவல்துறையினர் ஏற்கனவே நடத்திய விசார்ணை விவரங்களை ஒரு சீலிட்ட கவரில் அளிக்குமாறு அமர்வு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன் தினம் காவல்துறை அவ்ற்றை அளித்தது. நேற்று அதை பரிசீலித்த நீதிபதிகள் திருப்பி அளித்தனர்.
நேற்று ரிபப்ளிக் டிவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மிலிந்த் சாதே மாநில அரசு இந்த வழக்குக்காகவே சிபிஐ க்கு அளித்துள்ள பொது அனுமதியை ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார். இந்த வழக்கு குறித்து மும்பை காவல்துறையினர் சம்பந்தம் இல்லாதவர்களிடம் விசாரணை நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் அவர் சிபிஐ யை இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமெனவும் கூறினார்.
மும்பை நீதிமன்றம் இந்த மனுவின் அடிப்படையில் சிபிஐக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. வழக்கு நவம்பர் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.