டில்லி,
ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தின கொண்டாட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி டில்லியில் 9 நாட்கள் விமான சேவைகளை ரத்து செய்வதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்து உள்ளது.
குடியரசு தின ஒத்திகை மற்றும் பாதுகாப்பு காரணமாக வரும் ஜனவரி 18ந்தேதி முதல் 26ந்தேதி வரை பகல் 10.30 மணி முதல் 12.15 மணி வரை விமான நிலையம் மூடப்படும் என்றும், தினசரி குறைந்தது 100 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட இருப்பதாகவும் டில்லி சர்வதேச விமான நிலையம் அறிவித்து உள்ளது.
இதுகுறித்து இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த 9 நாட்களில் தினசரி 100 விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் சுமார் 15000 பயணிகள் பாதிப்படைவார்கள் என்றும் கூறி உள்ளது.
தினசரி 100 விமான சேவை ரத்து செவை செய்யப்படுவது இதுதான் முதல்முறை என்றும், ஆனால் சர்வதேச விமான நிறுவனங்கள் விமான சேவையை மறுசீரமைக்கக கோரி உள்ளதாகவும் கூறி உள்ளது.
டில்லி விமான நிலையத்தில் தினசரி 1350 விமானங்கள் வந்து செல்வதாகவும், இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் விமானங்களின் எண்ணிக்கை 10 முதல் 15 சதவிகிதம் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், தலைநகரில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெறுவதாலும், குடியரசு தின விழாவுக்கு உலக நாடுகளில இருந்து விருந்தினகள் மற்றும் விவிஐபிக்கள் கலந்துகொள்வதாலும், விமான சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம்.