சென்னை:
ண்ணா பல்கலை தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தெரிகிறது.

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்.,1 முதல் மார்ச் 12 வரை அண்ணா பல்கலை தேர்வுகள் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடந்தது.

இந்நிலையில், ஆன்லைன் தேர்வில் விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்டு அண்ணா பல்கலை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விடைத்தாள்களை அனுப்பி வைக்காததால் அவர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை என அண்ணா பல்கலை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆன்லைன் தேர்வில் தாமதமாக வந்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும். விடைத்தாள்களை தாமதமாக அனுப்பியதால் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது எனக்கூறினார்.

[youtube-feed feed=1]