சென்னை:
தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறு ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது 13 வாக்குச்சாவடிகளில் மே 19ந்தேதி அன்று மறுவாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது 13 தொகுதிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தருமபுரி, தேனி உள்ளிட்ட தொகுதிகளில் உள்ள 13 ஓட்டுச்சாவடிகளில் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் வரும் மே 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சாஹூ அறிவித்துள்ளார்.
மறு வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகள்:
தருமபுரி – 8 தொகுதிகள்
தேனி – 2 தொகுதிகள்
திருவள்ளூர் – 1 தொகுதி
கடலூர் – 1 தொகுதி
ஈரோடு – 1 தொகுதி
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.