புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மாதம் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் வரும் 12-ம் தேதி மறுவாக்குபதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 2வது கட்ட தேர்தல் கடந்த மாதம் 18ந்தேதி நடைபெற்றது. அப்போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட 10-ஆம் எண் வாக்குச்சாவடியில் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இது தொடர்பாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அந்த ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 6வது கட்ட தேர்தல் நடைபெறும் மே 12-ம் தேதி அந்த வாக்குச்சாவடி யில் மட்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.