ரிசர்வ் வங்கி : வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பண வீக்கம் அதிகரிக்கும்

டில்லி

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் முன் போலவே 6% எனவும் இதில் இப்போதைக்கு மாற்றம் இல்லை எனவும் அறிவித்துள்ளது.

இன்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை மாற்றி அறிவிக்கும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதில் ஏதும் மாற்றம் இன்று 6% என அறிவிக்கப்பட்டுள்ளது.  ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு 5.75% வட்டி என்பதும் தொடர்கிறது.

பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் எனவும் தற்போதுள்ள நிலவரப்படி 4.2 லிருந்து 4.6% வரை பணவீக்கம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  பொதுமக்களுக்கு இது ஒரு கெட்ட செய்தியாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  மேலும் பணமதிப்புக் குறைப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமுலாக்கம் ஆகியவற்றால் வளர்ச்சியின் வேகமும் குறையும் என அச்சம் தெரிவித்துள்ளது.

அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டி உள்ளதாக தெரிவித்தாலும் இது வரை எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் டீசல் விலையில் ரூ.2 குறைக்கப்பட்டும் அவை இரண்டும் ஜி எஸ் டி வரிவிதிப்பின் கீழ் வராததால் முழுமையான விலை குறைப்பை அடையவில்லை.

Tags: Repo rate is not changed by RBI