சென்னை:
வாடகை உயர்வு வலியுறுத்தி சென்னை துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் டிரெயிலர் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சுகுமார் கூறியதாவது,
வாடகை உயர்வு, நிலுவைத் தொகை தொடர்பாக துறைமுக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், அது குறித்து பேச்சு நடத்த துறைமுக நிர்வாகம் மறுத்து வருவதாகவும், இதன் காரணமாக துறைமுக நிர்வாகத்தை கண்டித்து, இன்று முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து உள்ளது.
அதன்படி இன்று முதல் துறைமுக சரக்குகளை ஏற்றி இறக்கி வரும் டிரைலர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக துறைமுகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படம் பொருட்கள் எடுத்துச்செல்லப்படுவது தடை ஏற்பட்டுள்ளது.