லகம் முழுவதும் போக்குவரத்தின் வேகத்தை அதிகரிக்க ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை குறித்து பரிசீலித்து வருகிறது.

குழாய் வழியே அதிகவேமாக பயணிக்கும் இந்த ரெயில் போக்குவரத்து குறித்து, 2013ம் ஆண்டு இயான் மஸ்க் நிறுவனம்  உலகுக்கு எடுத்துக்காட்டியது.  தற்போது  இந்த சிக்கலான, தொழிட்நுட்பம் மேலை நாடுகளில் செயல்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வுக்குழுவினர் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஸ்பெஸ்எக்ஸ் போட்டியில், கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளது.  இந்தியா சார்பாக  டீம் ஹெல்ப் இந்தியா நிறுவனம் கலந்துகொண்டது.

ஒலியைவிட அதிகமான வேகத்தில் செல்லத்தக்க வகையில் ஹைப்பர்லூப் எனப்படும் போக்கு வரத்து முறை உலகம் முழுவதும் பரிசீலிக்கப்பட்டும், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.

எக்ஸான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற நிறுவனங்கள் ஸ்பேஸ் எக்ஸ் ஆய்வு நிறுவனத்தின் பின்புலத்தில் இருந்து செயல்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்தியா வின் டீம் ஹெல்ப் நிறுவனம் இணைந்துள்ளது.

இந்த ஹைப்பர்லூப் திட்டம் போக்குவரத்தின் 5வது முறை திட்டம் என்று லோன் மஸ்க் நிறுவனம் கூறி உள்ளது.

இந்த திட்டத்தின்மூலம் ஒரு மணி நேரத்தில் 700 மைல்களை கடக்க முடியும். இதன் காரணமாக ஒரு நகரத்தில் இருந்த மற்றொரு நகரத்துக்கு செல்லும் பயண நேரம் வெகுவாக குறையும்.

இந்த பயணம் ஒரு குழாயினுள் பயணிக்கும்படியாக, காந்தங்களின் உதவியோடு செலுத்தப்படுவதாகும்.

இந்த திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டால், . 30 நிமிடங்களில் , சென்னையில் இருந்து பெங்களூருக்கும்,  80 நிமிடங்களில் டெல்லி மற்றும் மும்பை இடையே பயணிக்கவும் முடியும். இது கற்பனை செய்ய முடியாது.

இந்தியாவில் ஹைப்பர்லூப் போக்குவரத்து செயல்படுத்துவது குறித்து, டீம் ஹெல்ப் இந்தியா நிறுவனம் ஆய்வுகள் மேற்கொண்டது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்போது,  இந்தியாவில் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் ஒரு மோசமான பிரச்சினை. இருந்தாலும்,  உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை ஒப்பிடும்போது, எதிர்காலத்தில் இந்தியாவிலும ஹைப்பர் லூப் இயக்கப்படுவது சாத்தியமே என ஆய்வுகள் தெரிவிக்கிறது.

இந்த குழாய் போக்குவரத்து காரணமாக  மக்கள் மற்றும் சரக்குகளை விரைவாக சேர வேண்டிய இடத்தில் சேர்க்க முடியும். இந்த திட்டம் குறித்து கேட்பதற்கு தொடக்க காலத்தில் பைத்தியக்கா ரத்தனமானதாக இருக்கலாம், ஆனால் இது சாத்தியமே என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதுகுறித்து ஆய்வு செய்ய ஒரு வருடத்திற்கு முன்பு குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த குழுவினர் முயற்சியின் விளைவாக ஹைப்பர் லூப் திட்டம் இந்தியாவில் செயல்படுத்த முடியும் என்று தெரிவித்து உள்ளது.

தங்களது ஆய்வுகளின்படி பல வடிவமைப்பு மதிப்புரைகளுக்குப் பிறகு, எங்கள் வடிவமைப்பை ஸ்பேஸ்எக்ஸ் அங்கீகிரித்துள்ளது என்று கூறியுள்ளனர்.

இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை முன்னெடுக்க இது ஒரு வாய்ப்பாக அமைந்து உள்ளது என்றும்,   இந்தியாவில் சிறந்த பொறியியல் வல்லுநர்கள் உள்ளார்கள் என்பதை உலகிற்கு காண்பிக்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் சிக்கலான தொழில்நுட்பமாக இருந்தாலும் இதை இந்தியாவில் செயல்படுத்துவது சாத்தியமே என்று கூறியுள்ளனர்.

இந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து முறை இந்தியாவில் செயல்படுத்தப் பட்டால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு 30 நிமிடங்களில் சென்றடைய முடியும் என்பதில் வியப்பேதுமில்ல.

எதிர்காலத்தில் பயணிகள் ஒலி வேகத்தில் அன்றாட பயணம் செல்லும் நிலை உருவாகும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக அதிகபட்சமாக மணிக்கு 1,220 கிலோமீட்டர் வேகத்திலும், சராசரியாக  மணிக்கு 962 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும் வகையில் அதிவேக ஹைப்பர் லூப் ரயில் அமெரிக்காவில் தயாராகி வருகிறது.

ஹைப்பர்லூப் என்றால் என்ன?

ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் போக்குவரத்து முறையானது புல்லட் ரெயிலை விட அதிவேகத்தில் செல்ல கூடியதாக இருக்கும்.

இதனுள் உள்ள பயணிகள் பயணம் செய்யும்  பெட்டிகள் ரெயில்பெட்டிகள் போல ஒன்றோடொன்று இணைக்கபட்டு இருக்காது. தனித்தனி சிறு அறைகளாக (pods, capsule) ஒன்றோடொன்று தொடர்பு இல்லாதவையாக இருக்கும்.

இந்த போக்குவரத்து மின் காந்த அலைகளின் மூலம் பயணிப்பதால்,  ரெயில் செல்வது போல ஒரு தடத்தில் பயணிக்காது. மாறாக பெரிய  குழாய் ஒன்றினுள் பயணிகள்  அறைகள் முன்னோக்கி மிதந்து செல்லும்.

இந்த குழாயினுள் மிக குறைந்த காற்று அழுத்தமே இருக்கும். இதனால் இதிலுள்ள அறைகள் மறுமுனையில் இருந்து உறிஞ்சி எடுக்கப்படும். இவை தனி அறைகளாகவே பயன்படுத்தப்படும்.

அத்துடன் ஆன் டிமாண்ட் எனும் முறையில் பயணிகளின் தேவை, போக வேண்டிய இடம் என்பவற்றின் அடிப்படையில் பயணிக்கு தேவையான நேரத்துக்கு இவை புறப்படும்.

மேலும் இந்த ஹைப்பர் லூப் (Hyperloop) குழாய்களை தரையின் மீதோ, நிலத்துக்கு அடியிலோ கடலுக்கு அடியிலோ நிர்மாணிக்க முடியும்.

ஆனால் மிக முக்கியமாக இந்த குழாய் ஒரே நேர்கோட்டில் வளைவுகள் குறைவாக இருக்க வேண்டும் .

இதன் மூலம் இரண்டு முக்கிய நகரங்களை மட்டுமின்றி இடைப்பட்ட சிறு நகரங்களையும் இணைக்க முடியும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும்.சுற்றுசூழல் மாசுபாடு குறையும்.

இந்த தொழில்நுட்பம் இதுவரை எந்த நாடுகளிலும் செயல்படுத்த படவில்லை. அமெரிக்காவின் லாஸ் வெகாஸில் உள்ள ஆய்வு தளத்தில் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.