டில்லி

வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பால் இந்தியாவின் அன்னிய செலாவணி அதிகரித்துள்ளதாக ஐநா சபையின் பொருளாதார பிரிவு அறிவித்துள்ளது

அந்த அறிவிப்பின் படி, 62.7 பில்லியன் யு. எஸ். டாலர்கள் இந்தியாவுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களால் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இதனால் இந்தியா முதலிடத்தையும், சைனா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

டாலர்களில் இந்தியா 62.7 பில்லியன், சீனா 61 பில்லியன் பிலிப்பைன்ஸ் 30 பில்லியன் பாகிஸ்தான் 20 பில்லியன் என பணம் பெறப்பட்டுள்ளது.

பணம் அனுப்பும் நாடுகளில் அமெரிக்கா, சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

தற்போழுது வெளிநாடுகளில் பணி புரியும் மொத்த மக்கள் 20 கோடிக்கு மேல் உள்ளனர்.

வெளிநாடு சென்று பணிபுரிபவர்களில் ஆசியக் கண்டத்தை சேர்ந்தவர்களே அதிகம்.

அவைகளில் இந்தியாவும் சைனாவும் அதிக எண்ணிக்கையில் வெளிநாடு வாழ் மக்களைக் கொண்டுள்ளது.

வெளிநாட்டில் பணிபுரிபவர்களால் வீட்டின் வளமும் நாட்டின் வளமும் நல்ல முன்னேற்றம் அடைகிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.