ரெம்டெசிவிர் (Remdesivir) COVID-19 இறப்பு அபாயத்தை 62% குறைக்கிறது: கிலியாட் சயின்ஸஸ்

Must read

ரெம்டெசிவிர் மருந்தின் திறனைப் பற்றிய ஆய்வில் இது முக்கியமான கண்டுபிடிப்பாகும். இதன் உண்மைத் தன்மையை வருங்கால மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது. 23 வது சர்வதேச எய்ட்ஸ் மாநாட்டின் போது நடைபெற்ற விர்ச்சுவல் COVID-19 மாநாட்டில் வழங்கப்பட்ட முடிவுகள் குறித்து கிலியட் நினைவுப்படுத்தியது.

கிலியட் சயின்ஸால் வெளியிடப்பட்ட புதிய தகவல்களின் படி, அவர்களின் ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவிர் கடுமையான பாதிப்புடைய COVID -19 நோயாளிகளின் இறப்பு அபாயத்தை 62% குறைக்கிறது. இது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாகும், ஆனால், இது வருங்கால மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ரெம்டெசிவிரின் 3 ஆம் கட்ட ஆய்வுகளில் சிகிச்சையளிக்கப்பட்ட ஒரே மாதிரி அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளைக் கொண்ட 312 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள்  மற்றும் 818 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட தன்னார்வ நோயாளிகளிடையே மேற்கொண்ட ஆய்வுகள் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு  அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்கு கொண்ட அனைத்து நோயாளிகளும் ஒரே மாதிரியான அடிப்படை பண்புகள் மற்றும் நோயின் தீவிரத்தன்மை கொண்டவர்கள். இந்த ஆய்வுக்கான சிகிச்சை சுமாரான பாதிப்பில் தொடங்கி கடுமையான பாதிப்புகள் பெறும்வரை பல்வேறு கட்டங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு முடிவுகள் பதிவு செய்யப்பட்டன. இது வட அமெரிக்கா, (92% சதவீதம், ரெம்டெசிவிர் சிகிச்சை,  91% ரெம்டெசிவிர் அல்லாத நிலையான சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டது) ஐரோப்பா (5% சதவீதம், ரெமெடிவிர் சிகிச்சை,  7% ரெம்டெசிவிர் அல்லாத நிலையான சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டது),   மற்றும் ஆசியா  (3% சதவீதம், ரெமெடிவிர் சிகிச்சை,  2% ரெம்டெசிவிர் அல்லாத நிலையான சிகிச்சையுடன் ஒப்பிடப்பட்டது).

ரெம்டெசிவிர் சிகிச்சையானது கணிசமாக மேம்பட்ட மருத்துவ மீட்பு திறன் மற்றும் பராமரிப்பு தரத்துடன் உள்ளது என்பது அதன் இறப்பு அபாயத்தில் 62 சதவிகிதம் குறைக்கும் திறன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள நிலையான சிகிச்சையுடன் ஒப்பிடும் போதும்,  ரெம்டெசிவிர் சிகிச்சையில் 74.4 சதவீதம் பேர் 14 ஆம் நாளுக்குள் முழுமையான குணம் அடைந்தனர்.  ஆனால் நிலையான சிகிச்சையில் 59 சதவீதம் பேர் மட்டுமே குணமடைந்தனர்.
ரெம்டெசிவிர் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் இறப்பு விகிதம் 14 ஆம் நாளில் 7.6 சதவீதமாக இருந்தது. ரெம்டெசிவிர் எடுக்காத நோயாளிகளில் இறப்பு விகிதம் 12.5 சதவீதமாக இருந்தது. “இந்த ஒப்பீட்டு பகுப்பாய்வின்படி, நிலையான சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, ரெம்டெசிவிர் மருந்தின் நன்மைகள் ஒரு மதிப்பு மிக்க இடத்தில் உள்ளது” என்று கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையத்தின் சூசன் ஒலெண்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஒப்பீட்டு காட்டுபாட்டுக் குழுவைக் கொண்ட  சோதனையைப் போல தீவிரமாக இல்லாவிட்டாலும், இந்த ஆய்வு நிஜ நோயாளிகளின் அமைப்பைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முடிவுகள்  சோதனை முறை சிகிச்சைகளுக்கும் நிஜ சிகிச்சைகளுக்கும் ஒரு பாலமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,  இந்த வைரஸைப் பற்றிய நமது புரிதலை அதிகப்படுத்தவும்,  நடந்துகொண்டிருக்கும் தொற்றுநோய்களின் அசாதாரண வேகத்தை முடிவுகளில் பிரதிபலிக்கவும் முடிகிறது. “இந்த ஒப்பீட்டு பகுப்பாய்வின் முடிவுகள், முன்னர் வழங்கப்பட்ட தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான நிறுவனம் (என்ஐஐஐடி) நடத்திய ஒப்பீட்டு கட்டுப்பாடு குழுவுடன் கூடிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆய்வில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட COVID-19 நோயாளிகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப் போகிறது. இதன்படி, இது ரெம்டெசிவிர் சராசரி குணமடையும் காலத்தைக் குறிப்பிடத்தக்க அளவு (15 நாளில் இருந்து 11 நாளாக) குறைக்கிறது எனபது நிரூபணமாகிறது.

என்ஐஏஐடி ஆய்வில், ஒப்பீட்டுக் குழுவுடன் ஒப்பிடும்போது ரெம்டெசிவிர் கொடுக்கப்பட்ட நோயாளிகளில் காணப்பட்ட குறைந்த இறப்பு விகிதம் புள்ளிவிவர முக்கியத்துவத்தை எட்டவில்லை (\ – 7.1 சதவீதம் மற்றும் 11.9 சதவீதம்). இருந்தாலும், தற்போதைய அவசரநிலை காரணமாக, கடுமையான பாதிப்புடைய நோயாளிகளுக்கு அவசர நிலை உபயோகமாக  பயன்படுத்த உரிய அங்கீகாரத்தை ரெமெடிசிவிருக்கு வழங்கப்பட்டுள்ளது. “மெய்நிகர் கோவிட் -19 மாநாட்டில் வழங்கப்பட்ட இந்தத் தகவல்கள் குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் பயன்படுத்துவது குறித்து கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துகின்றன, குறிப்பாக, COVID-19 நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள், அத்துடன் குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் மகப்பேறுக்கு பிறகான பெண்கள், ”என்று கிலியட் சயின்ஸின் தலைமை மருத்துவ அதிகாரி பி.எச்.டி., எம்.டி., மெர்டாட் பார்சி கூறினார்.
Thank you: The National Herald India

More articles

Latest article