டில்லி
ரிலையன்ஸ் நிறுவனம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

நேற்று ரிலையன்ஸ் குழுமத்தின் 42 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கிகா ஃபைவர் அடுத்த மாதம் தொடங்க உள்ளது குறித்து அறிவித்தார். அத்துடன் நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்/
கடந்த வாரம் மத்திய அரசு காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ நீக்கம் செய்தது. அத்துடன் காஷ்மீர், ஜம்மு என இரு யூனியன் பிரதேசங்களாக அந்த பகுதி பிரிக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்தியத் தொழிலதிபர்கள் காஷ்மீரில் முதலீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். குறிப்பாகத் திரைப்படம், சுற்றுலா, உணவு பதனிடுதல், மற்றும் ஏற்றுமதி துறையினர் மாநில வளர்ச்சிக்கு உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்
முகேஷ் அம்பானி தனது உரையில் “பிரதமர் மோடி அவர்கள் கூறியது போல நாங்கள் ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களுக்கான தேவைகளை நிறைவேற்ற உள்ளோம். அதனால் இந்த பகுதிகளில் ரிலையன்ஸ் குழுமம் முதலீடுகள் செய்யத் திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புக்கள் விரைவில் வெளிவரும்” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]