jio-door-delivery

இந்தியாவில் இணையதள வசதியில் 4ஜி சேவையை பிரபலப்படுத்தும் நோக்கில், ரிலையன்ஸ் நிறுவனமானது 4ஜி ஜியோ சிம்-யை அறிமுகப்படுத்தியது. இதை இலவசமாக வாங்கிக்கொள்ளலாம் என்பதால், மக்கள் மத்தியில் வரவேற்ப்பு அதிகமானதையடுத்து, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் கூட்டம் இன்றளவும் குறைந்தபாடு இல்லை. இதனால் 4ஜி ஜியோ சிம்-யை ஹோம் டெலிவரி மூலம் பெற்றுகொள்ளவும் வழிவகை செய்துள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

ரிலையன்ஸ் முகநூல் பக்கத்தில் “Get Your Jio SIM Home Delivered” என்ற விளம்பரத்தை தேர்வு செய்து, பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் வசிக்கும் நகரத்தின் பெயர் குறிப்பிட வேண்டும். தற்போது சென்னை, அகமதாபாத், பெங்களூரு, டெல்லி, சண்டிகர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, நவி மும்மை, புனே மற்றும் விசாகப்பட்டிணம் போன்ற சில முக்கிய நகரங்களுக்கு மட்டும் இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளனர்.

நம்முடைய சுய தகவலை பதிவு செய்து ஷெட்யூல் சிம் டெலிவரி ஆப்ஷனை தேர்வு செய்தால், குறுகிய காலத்தில் ஜியோ 4ஜி சிம்-யை பெற்றுகொள்ளமுடியும். இதைப்பெற ஆதார் அட்டை கட்டாயம் வேண்டும். அதேபோல் பதிவு செய்த முகவரியை தவிர வேறு முகவரிக்கு டெலிவரி செய்ய மாட்டார்கள்.