டில்லி
உலகில் உள்ள மிகப்பெரிய 10 செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 1500 கோடி டாலர் அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உலகின் மிகப்பெரிய 10 செல்வந்தர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 6450 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஆசியப் பகுதியின் பெரும் செல்வந்தர் பட்டியலில் இருந்த முகேஷ் அம்பானி தற்போது உலகின் மிகப்பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் 9 ஆம் இடத்துக்கு வந்துள்ளார்.
இவர் ஆரக்கில் கார்ப்பரேஷ நிறுவனத்தின் லாரி எலிசன் மற்றும் பிரான்சின் பிராகோயின் மேயர் உள்ளிட்டோரை பின்னுக்குத் தள்ளி 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார். இவர் ரிலையன்ஸ் குழுமப் பங்குகளில் 42% முகேஷ் அம்பானியிடம் உள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு அக்கமான ஜியோவுக்கு அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது.
தற்போது உலகெங்கும் கொரோனா தாக்குதலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பல நிறுவனங்கள் சரிவைச் சந்தித்து வருகின்றன. ஆனால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நல்ல லாபம் ஈட்டி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 1500 கோடி டாலர் அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது. இது இந்திய நிறுவனங்களில் முதல் முறையாகும்.
இந்நிறுவனத்தில் ஃபேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், சில்வர் லேக், கேகேஆர் அண்ட் கோ, சாவ்ரின் வெல்த் பண்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்துள்ளன.