
ரிலயன்ஸ் ஜியோவில் 10 கோடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக அதன் அதிபர் முகேஷ் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாஸ்காமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரிலயன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி இதனை தெரிவித்தார்.
மேலும் அவர், தாங்கள் அறிமுகப் படுத்தியிருக்கும் இலவச இணைய சேவை சலுகைகளும், இலவச தொலைபேசி அழைப்பு சேவையும் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதேநேரம், மார்ச் 31 ம் தேதியுடன் ஜியோ 4ஜியின் சலுகைகள் திரும்ப பெறப்படும் என்பதால் அதன் வளர்ச்சி பாதிக்கும் நிலை உள்ளது.
இலவசமாக பதிவிறக்கம் செய்வோர்களின் வசதியை கருத்தில் கொண்டு ஜியோ, 4 ஜி திட்டத்தை நூறு ரூபாய்க்கு அறிவிக்கும் என நம்பப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel