புதுடெல்லி: தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயம், அணில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது திவாலாகும் செயல்முறையைத் துவங்குவதற்கு அனுமதியளித்துள்ளது.

இதன்மூலம், தனது 357 நாள் வழக்காடு செயல்முறையிலிருந்து அந்நிறுவனம் விலக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் ரூ.50000 கோடி கடன் வைத்துள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், அணில் அம்பானி குழும நிறுவனங்களிலேயே திவாலாகும் முதல் நிறுவனமாகும்.

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம், இந்நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தை நிறுத்திவைத்து, புதிய தீர்வுகாணும் நிபுணர்களை நியமித்துள்ளது.

இதுதவிர, எஸ்பிஐ வங்கி தலைமையிலான 31 வங்கிகள் இடம்பெற்ற கூட்டுக்குழு, கடன் கொடுத்தோரின் கமிட்டியை அமைக்கவும் அனுமதி அளித்துள்ளது.