சென்னை: இடைவிடாத அழுத்தம். மீண்டும் மீண்டும் கடிதங்கள். இறுதியாக, ஒப்புதல்!  என  தமிழ்நாட்டின் 8 இடங்களில் அகழ்வாய்வுக்கு மத்தியஅரசு  அனுமதி  அளித்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில்,  ” கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய அரசு அனுமதி “நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது. கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்” எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து  இந்துஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,

இடைவிடாத அழுத்தம். மீண்டும் மீண்டும் கடிதங்கள். இறுதியாக, ஒப்புதல்.

பல மாதங்கள் தாமதத்திற்குப் பிறகு, #கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் துறை அகழாய்வுகளை மத்திய அரசு அனுமதித்துள்ளது.

திமுகவின் தொடர் முயற்சியால் கிடைத்த வெற்றி இது.

ஆனால் நாங்கள் முடிக்கவில்லை. கீழடி அகழாய்வு அறிக்கையின் மீது மத்திய பாஜக அரசு இன்னும் அமர்ந்திருக்கிறது. அதுவும் வெளிவரும் வரை நிறுத்த மாட்டோம்.

தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!

அடுத்து, ஒன்றிய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் #கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]