பிரிஸ்பேன்: நான்காவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில், வெறும் 4 புதிய பெளலர்களைக் கொண்ட இந்திய டீம், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களை 369 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

‍நேற்றையப் போட்டியில் லபுஷேன் சதமடித்து அவுட்டானார். ஸ்மித் 36 ரன்களுக்கு நடையைக் கட்டினார். வேட் 45 ரன்களுக்கு அவுட்டானார்.

இன்று தங்கள் பேட்டிங்கை தொடர்ந்து கேமரான் கிரீன் 47 ரன்களும், டிம் பெய்னே 50 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். பேட் கம்மின்ஸ் 2 ரன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சற்று மிரட்டல் காட்டிய ஸ்டார்க் 20 ரன்களிலும், லயன் 24 ரன்களிலும் அவுட்டானார்கள். ‍ஹேசில்வுட் 11 ரன்களை அடிக்க, ஆஸ்திரேலியா 369 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது.

இந்திய தரப்பில், மொத்தம் 5 பேருமே புதிய பந்துவீச்சாளர்கள் என்ற நிலையில், நேற்று 8 ஓவர்கள் வீசிய நவ்தீப் சைனி காயமடைய, இதர 4 புதிய பந்துவீச்சாளர்களை வைத்து இந்தியா சமாளிக்க வேண்டியிருந்தது. ஆனாலும், இந்தியப் பட்டாளம் மனம் தரளவில்லை.

டி.நடராஜன், ஷர்துல் தாகுர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை அள்ள, முகமது சிராஜ் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.