ரியாத்: இந்தியா & ஜம்மு காஷ்மீர் தொடர்பாக, செளதி அரேபியாவை, பாகிஸ்தான் அரசு விமர்சித்த காரணத்தால், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தியா & ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பை பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கவைக்க செளதி அரேபியா தவறியது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார்.
இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான உறவில் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு செளதி அரேபியா 3.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியிருந்தது.
தற்போது, அந்தக் கடன் தொகையில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பி செலுத்துமாறு பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கேட்டுக் கொண்டிருந்தார்.