சென்னை: செம்மரக் கடத்தல் தொடர்பாக தமிழகத்தில் இதுவரை எத்தனை வழக்குகள் பதியப் பட்டுள்ளன? என்பது குறித்து விரிவாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில், மரம் வெட்ட செல்லும் தமிழர்கள் தொடர்ச்சியாக, ஆந்திர மாநில காவல்துறையின ரால் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றனர். கடந்த 2015ம் ஆண்டு ஒரே நாளில், 20 தமிழக தொழிலாளர்களை சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து, அவ்வப்போது செம்மரம் கடத்தப்படுவதும், தமிழர்கள் பிடிபடுவதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆந்திர போலீசார் தமிழர்கள் என்றாலே செம்மரக் கடத்தல் கும்பல் என்ற கண்ணோட்டத்துடனேயே நமவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொர்பாக தமிழகம் மற்றும் ஆந்திராவிலும் பல வழக்குகள் உள்ளன.
சென்னையில் செம்மரம் கடத்தல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, வழக்குகளில் காவல் துறையினர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் பெயர் இடம் பெற்றுள்ளதா? என்பது குறித்து 2 வாரத்தில் தமிழக டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.