வாஷிங்டன்

லக செல்வந்தர்களில் ஒருவரான பில் கேட்ஸ் தாம் ஐபோன் பயன்படுத்துவதில்லை எனக் கூறி  காரணங்களை விளக்கி உள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வரும் ஐபோன்கள் உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ளது. சுமார் 10 லட்சம் பேர் பயன்படுத்தும் ஐபோனை  உலகின் மிகப்பெரிய தலைவர்கள் பயன்படுத்துகின்றனர். உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தாம் ஐபோனை பயன்படுத்துவதில்லை எனக் கூறி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.

சமீபத்தில் கிளப்ஹவுஸ் என்னும் செயலி ஒன்றின் நேர்காணலில் பில் கேட்ஸ் பங்கேற்றார்.  அவரிடம் அப்போது மொபைல்கள் குறித்து கேட்டபோது ”நான் அதிக அளவில் தினசரி உபயோகத்தில் ஆண்டிராய்ட் போன்களை மட்டுமே பயன்படுத்துகிறேன்.    ஆண்டிராய்ட் போன்கள் இயக்குவதற்கு எளிதாக உள்ளது.  குறிப்பாக மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை இயக்க ஆண்டிராய்ட் உதவியாக உள்ளது.

ஐபோன்கள் இயக்குவது கடினமாக உள்ளதால் எனக்கு அது சிக்கலாக உள்ளது.   என்னுடைய நண்பர்களில் பலர் ஐபோன்களை பயன்படுத்துகின்றனர்.  ஆனால் எனக்கு அவை தூய்மையாக இல்லை எனவே தோன்றுகிறது.  என்னிடமும் ஒரு ஐபோன் உள்ளது.  ஆனால் அதை நான் அடிக்கடி பயன்படுத்துவது கிடையாது.  எப்போதாவது பயன்படுத்தியது உண்டு” எனத் தெரிவித்தார்.

பில் கேட்ஸ் பேட்டியளித்த கிளப்ஹவுஸ் செயலி தற்போது ஆண்டிராய்ட் போன்களில் கிடையாது.  ஐபோன்களில் மட்டுமே இந்த செயலி செயல்பட்டு வருகிறது.   இந்த செயலிக்கு பில் கேட்ஸ், எலான் ,மஸ்க் உல்ளிட்ட பலர் பேட்டி அளித்துள்ளனர்.  பல பிரபலங்கள் ஐபோன் பாதுகாப்பானது எனக் கூறி அதை பயன்படுத்தும் போது பில் கேட்ஸ் இவ்வாறு தெரிவித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.