தராபாத்

ற்கொலை செய்துக் கொண்ட ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமூலாவின் தாயார் அரசு அளித்த இழப்பிட்டுத் தொகையை பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதியன்று ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.  இவர் அம்பேத்கார் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர் ஆவார்.    இவரது தற்கொலைக்கு மத்திய அரசின் அமைச்சர்களான ஸ்மிரிதி இராணி மற்றும் பண்டாரு தத்தாத்ரேயாவே காரணம் என பல்வேறு அமைப்பினர் போரட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் நாடெங்கும் பரவியது.   பல பல்கலைக்கழக மாணவர்களும் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.    அப்போது ஐதராபாத் பல்கலைக் கழகம் ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலாவுக்கு எட்டு லட்சம் ரூபாய் இழப்பீடு அளிப்பதாக தெரிவித்தது.   ஆனால் அதை அப்போது ஏற்க மறுத்த ராதிகா தற்போது அதனை பெற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து ராதிகா வெமுலாவிடம் கேட்கப்பட்டது.  அதற்கு அவர், “இந்த இழப்பீடு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.   பல்கலைக்கழக துணை வேந்தர் சிபாரிசில் வழங்கப்படவில்லை.   அதனால் அதை ஏற்றுக் கொண்டுள்ளேன்”  என பதில் அளித்துள்ளார்.

[youtube-feed feed=1]