மும்பை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார். அதே வேளை யில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் சூழல் பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும் என்றும் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவிகிதமாக நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% இருந்து 7.8%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாகவும், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4% ஆகவே தொடரும் என்றும் தெரிவித்தார். குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 11வது முறையாக 4%ஆக தொடரும் – நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்தார்.
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றமிருக்காது. வங்கிகளுக்கு ஆர்பிஐ தரும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.35% லிருந்து 3.75% ஆக உயர்த்தப்படுகிறது.
பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும் என்றவர், விலைவாசி உயர்வு 5.7%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு இருப்பதாக வும், கச்சா எண்ணெய் விலை உயர்வு விலைவாசி மீது குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது, உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் சூழல் பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
பணவீக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கொரோனாவால் பொருளாதாரம் உயர்ந்தாலும் ஐரோப்பாவின் மோதல்கள் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கிறது. வெளித் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு மிகவும் சரி சமமான மட்டத்தில் உள்ளது என்றார்.
பணப்புழக்கத்தை திரும்பப் பெறுவதற்கான பொருளாதாரச் செலவு மற்றும் பணவியல் கொள்கையின் நிலைப்பாட்டை மனதில் கொண்டு, பணப்புழக்கம் திரும்பப் பெறுவதற்கான பொருளாதாரச் செலவு மற்றும் அவசியத்தை மிகவும் கவனமாக எடைபோட்ட பிறகு, பல ஆண்டு காலக்கட்டத்தில் பணப்புழக்கம் திரும்பப் பெறப்படும். சூழ்நிலை வேகமாக மாறும், எங்கள் அனைத்து நடவடிக்கைகளும் அதற்கேற்ப வடிவமைக்கப்படும் என்றார்.
பணவியல் கொள்கைக் கண்ணோட்டத்தில் போரினால் தூண்டப்பட்ட காரணிகளால், மேல்நோக்கி திருத்தப்பட்ட பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக் கணிப்புகள்; கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலராக உயர்வு, கோதுமை, சமையல் எண்ணெய் விலை போன்றவை கண்காணிக்கப்பட்டன என்றும், போர் எவ்வாறு முன்னேறுகிறது மற்றும் வரவிருக்கும் மாதங்களில் பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். அதற்கேற்ப உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார்.
எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி வங்கியின் இணைப்பு அறிவிப்பு தொடர்பாக நாங்கள் முன்மொழிந்துள்ளோம். எங்கள் பல்வேறு ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் மற்றும் பிற அம்சங்களின் அடிப்படையில் இந்த திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று கூறியவர், கிரெடிட்/டெபிட் கார்டுகளை வழங்குவதை நிறுத்த மாட்டோம், ஏனெனில் அவற்றில் பல பிற பயன்பாடுகள் உள்ளன; அவை பணத்தை திரும்பப் பெறுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, உணவகம், கடை அல்லது வெளிநாட்டில் பணம் செலுத்தும்போது அவற்றைப் பயன்படுத்தலாம். எனவே கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் தொடரும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.