அதிக வட்டி விகிதங்கள், கட்டுமானச் செலவுகள், மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக சில அமெரிக்க நகரங்களில் வீட்டு சந்தை கடுமையாக பாதிக்கப்படலாம் என்று தி வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

புளோரிடாவின் டம்பா, வின்டர் ஹேவன், பாம் பீச் ஆகிய பகுதிகளில் அதிகப்படியான கட்டிடங்கள் கட்டப்படுவது, காப்பீட்டு குழப்பம், வாடிக்கையாளரிடம் மந்தநிலை ஆகியவை விலை வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறது.

சிகாகோவின் வெஸ்ட் லூப் பகுதியில் குத்தகை நீட்டிப்பு அதிகரித்துள்ளதாகவும் கட்டுமான நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ஒப்பந்தங்களை மேற்கொள்வது சந்தை மந்தநிலையைச் சுட்டிக்காட்டுவதாக அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.

கடன்-வருமான விகிதங்கள் 45–50% வரை உள்ளவர்களுக்கும் தற்போது நியூயார்க் மெட்ரோவில் வீடு வாடகைக்கு விடப்படுகிறது, முன்பு இது 30%மாக இருந்தது. மேலும் வாடகை குறைப்புகள் அதிகரித்துள்ளதால் 2008 நிலையை நினைவூட்டுவதாக ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் கூறுகின்றனர்.

அதேபோல் டென்வர் நகரில் சராசரி விலை கொண்ட வீட்டிற்கான மாதாந்திர EMI $3,600 க்கும் அதிகமாக இருப்பதாக டென்வர் மெட்ரோ ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சங்கம் சமீபத்தில் தெரிவித்துள்ளது, இது பல குடும்பங்களுக்கு முற்றிலும் எட்டாதது. இதனால் விற்பனை தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த போக்கு நீடித்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தையில் வீட்டு மதிப்பு 10% வீழ்ச்சி அடையும் என்று எச்சரித்துள்ளனர்.