டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்  பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ. அதன்படி, ஜூலை 21-ந்தேதி  பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.

இந்த கூட்டத்தொடரில்,  பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல், இந்திய ராணுவத்தின்  சிந்தூர் ஆபரேசன் குறித்து விவாதிக்க தயார் என எதிர்க்கட்சிகளுக்கு பதில் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பதிலடி குறித்து  நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில்,   பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார்.  அதன்படி,   பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரில்,  பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.