திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கிய போதிலும் பல திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதேசமயம் அண்மையில் மறு வெளியீடு செய்யப்பட்ட செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் கணிசமான வசூலை குவித்தது திரையரங்க உரிமையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
இதனால் வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசித்து வருகின்றனர் .
அந்த வரிசையில் அஜித் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் கடந்த வாரம் தமிழகம் முழுக்க 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து சிம்புவின் மன்மதன் இந்த வாரமும், மாதவனின் மின்னலே திரைப்படம் அடுத்த வாரமும் மறு வெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.