சென்னை: வாடிக்கையாளர்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கு, வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுக்கும் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கான புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் இருந்து தானாக பணம் எடுத்துக் கொள்ளும் முறைக்கு, இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வீடுகள், வாகங்கள் உள்பட பல்வேறு தேவைக்களுக்காக வங்கிகள், நிதிநிறுவனங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் கடன் பெற்று வருகிறார்கள். அநத கடனை அடைக்கும் வகையில் மாதாமாதம் இஎம்ஐ முறையில் (EMI) பணம் செலுத்தி வருகின்றனர். ஆனால், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் போன்றோரின் சம்பளம் வங்கிகளில் கிரெடிட் ஆவதால், அவர்களது இஎம்ஐக்கான பணம், அவர்களது வங்கிக்கணக்கில் இருந்து, கடன் கொடுத்த நிறுவனம் தானாகவே பணம் எடுத்துக்கொள்ளும் முறை இதுவரை செயலில் இருந்து. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, இனிமேல் ஆட்டோ டெபிட் முறை கிடையாதுஎன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஏற்கனவே ரிசர்வ் வங்கியில் கடந்த 2009ம் ஆண்டு வாடிக்கையாளரின் பரிவர்த்தனைகளை நெறிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதித்து அனைத்து வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதில், “டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் அனைத்தும் Additional Factor Authentication’ அங்கீகாரத்தை 2021-ம் ஆண்டின் மார்ச் 31-ம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும்” என அறிவித்து காலக்கெடு நிர்ணயித்திருந்தது.
ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. மேலும் பல நிறுவனங்களும் வங்கிகளும் இதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் கால வரையறையை செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஆட்டோ டெபிட் முறைக்கு நேற்றோடு அந்த கால அவகாசம் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குப் பிறகும், புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உருவாக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்திருக்கிறது.
புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
அதன்படி இன்று முதல் வங்கிகளுக்கான ஆட்டோ டெபிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தவணைத் தொகை எடுக்கப்படும் தேதிக்கு ஒருவாரத்திற்கு முன்பாக, வாடிக்கையாளரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி மூலமும், மின்னஞ்சல் மூலமும் வங்கிகள் தகவல் அனுப்ப வேண்டும். வாடிக்கையாளர்கள், இதன் அடிப்படையில், தொகைகளை எடுக்க அனுமதி அளிக்கவும் அல்லது தொகையின் அளவை திருத்தி அமைக்கவும் வகை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர்கள், அதை சரியாக கவனித்து பணம் கட்டாவிட்டால், சேவையை இழக்க நேரிடும். குறித்த தேதிக்குள் லோன் கட்ட தவறினால் அதுக்கு வேறு அபராதம் கட்டவேண்டும்.
குறிப்பாக மருத்துவக்காப்பீடு, ஆயுள்காப்பீடு, வாகனகாப்பீடு, நீங்கள் லோன் EMI கட்டி வருபவராக இருந்தால் வங்கியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது.