டெல்லி
புழக்கத்தில் இருந்த ரூ 2000 நோட்டுகளில் 97.76%, மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரூ, 2000 நோட்டு களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறு கூறியது.
இந்த வாபஸ் அறிவிப்பு வெளியானபோது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. கடந்த 30-ந்தேதி மாலை நிலவரப்படி, ரூ.7 ஆயிரத்து 961 கோடி மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.
எனவே 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மக்கள் தங்கள் கைவசம் உள்ள நோட்டுகளை 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.