டெல்லி: விரைவில் புதிய 20 ரூபாய் நோட்டு  வெளியிட இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இடப்பட்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றதும் பண மதிப்பிழப்பு ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார் பிரதமர் மோடி. இதனால் நாட்டு மக்கள் கடுமையான துன்பங்களை எதிர்கொண்ட நிலையில், பலர் உயிரிழந்த அசம்பாவிதங்களும் அரங்கேறின. பின்னர் ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் முடக்கப்பட்டு, புதிய ரூ.2000 மற்றும் ரூ.500, ரூ.200 என புதிய  நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன. மேலும் அவ்வப்போது ரூ.50 , ரூ.20, ரூ.10  என பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுக்களும் அறிமுகப்படுத்தப்பட்டன,.

இந்த நிலையில், தற்போது புதிய ரூ.20 நோட்டை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.  எபுதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  புதிய ரூ.20 நோட்டுக்கள் வெளியிட இருப்பதாகவும்,   இந்த நோட்டுகள் ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்கோத்ராவின் கையெழுத்து இடப்பட்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. . மற்றபடி  இந்த ரூபாய் நோட்டில் வேறெந்த மாற்றங்களும் இதில் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும், தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடி ஆகும் என்ற தகவலையும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.