இந்தியாவில் அரசுத் துறை, பொதுத்துறை, தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் என பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில், வங்கிகளுக்கு வங்கி வட்டி மற்றும் குறைந்தபட்ச வைப்புத் தொகை உள்ளிட்டவைகளில் ஒரே தரநிலை பின்பற்றப்படாமல் பல்வேறு மாறுபாடுகள் உள்ளன.

தவிர, நகைக் கடன்களுக்கான வட்டியும் வங்கிக்கு வங்கி வேறுபடுவது போன்ற காரணங்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்கு துவங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

மேலும், இதுபோல் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துக்கொண்டு போலி பரிவத்தனைகள் மேற்கொள்வதும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வங்கியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு இருந்தால், அதிக அபராதம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஒரு நபரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை இருந்தால், அபராதம் விதிக்கப்படும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, கணக்கு பதிவுகளை வைத்து சரியான கணக்கை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

மோசடி மற்றும் திருட்டை குறைக்கவே ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.