டில்லி
இந்தியாவில் இஸ்லாமிய வங்கி முறைக்கு இந்தியாவில் அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.
இஸ்லாமிய வழக்கப்படி வட்டி என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகும். அதன் படி வட்டி வழங்குவதும் வாங்குவதும் இஸ்லாமிய சட்டப்படி குற்றமாகும். அந்த முறைப்படி இஸ்லாமியர்களுக்காக தனி வங்கி அமைத்து அதன்படி வட்டியில்லா பரிவர்த்தனைகளை நிகழ்த்துவது பற்றி ரிசர்வ் வங்கியின் கருத்தை அறிய வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒரு மனு தரப்பட்டது.
இதற்கு ரிசர்வ் வங்கி தனது பதிலை அளித்துள்ளது. அந்த பதிலில், “இஸ்லாமிய வங்கி முறைப்படி வங்கிகள் துவங்குவது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசு ஆராய்ந்தது. நமது நாடு முழுவதும் ஏற்கனவே வங்கி முறைகளுக்கான சட்டம் இயற்றப் பட்டு அதன்படி வங்கிகள் நடந்துக் கொண்டு வருகின்றன. இதனால் மக்கள் பல நன்மை தரும் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதனால் ஷரியா வங்கி என்னும் இஸ்லாமிய வங்கி முறை தேவையற்ற ஒன்றாகும். எனவே இது போன்ற வங்கி முறையை துவங்க அனுமதி வழங்க ரிசர்வ் வங்கிக்கு உத்தேசமில்லை” என அந்த பதிலில் ரிசர்வ் வங்கி தெரிவுத்துள்ளது.