மும்பை:
2014ம் ஆண்டிற்கு பிறகு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.
2016ல் பணமதிப்பிழப்பு, 2017ல் ஜிஎஸ்டி அமல் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீண்டு மென்மையான வளர்ச்சிக்கான அடையாளமாக இந்த உயர்வு கருதப்படுகிறது. இந்த உயர்வு வரும் வாரத்தில் இருக்கலாம் அல்லது ஆகஸ்டில் இருக்கலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்,
கடந்த மார்ச் 31ம் தேதி வரை இந்தியா 7.7 சதவீத ஆண்டு வளர்ச்சியை அடைந்திருந்தது. ரெபோ விகிதம் 6 சதவீதம் என்ற நிலையை ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. இது பண வீக்கத்தின் அளவீடாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்திய பொருளாதாரத்தையும், பண மதிப்பையும் தாக்கியுள்ளது.
கடந்த ஆண்டில் ஆசியா பண மதிப்புகளில் சிறந்த செயல்பாட்டை கொண்டிருந்த ரூபாய்க்கு 2018ல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.