டெல்லி

ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் அவசியம் ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் அவசியம் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது,

ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அவற்றில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் இல்லை. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை.  ந்ப்முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கிறார்கள்.

இதனால் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 நோட்டு மட்டுமே அதிகளவில் இருக்கும். இதனால் ரூ.100, ரூ.200 நோட்டு எடுக்க முடியாமல் ஏழை எளியோர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரிசர்வ் வங்கிக்கு இதுகுறித்து அதிகளவில் புகார்கள் சென்றன.

இதையொட்டி ரிசர்வ் வங்கி இன்று,,

“அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும். வரும் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும்”.

என உத்தரவிட்டுள்ளது.

[youtube-feed feed=1]