வங்கி அல்லாத நிதி நிறுவன (NBFCs) முதலீடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் தங்கள் அவசரத் தேவைக்காக பணத்தை திரும்பப்பெறும் நிலையில் அவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் முழுத் தொகைகையும் திருப்பித் தர வேண்டும்.

அவசர தேவை காரணமாக முதிர்வு தேதிக்கு முன்னரே திரும்பத் தரும் தொகைக்கு நிதி நிறுவனங்கள் வட்டி அளிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

மேலும், அவசர தேவை தவிர வேறு காரணங்களுக்காக பணத்தைத் திரும்பப்பெறும் முலீட்டாளர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை அவர்கள் முதலீடு செய்துள்ள பணத்தில் 50 சதவீதத்தை வட்டி இல்லாமல் திரும்ப தர அறிவுறுத்தியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகள் வரும் 2025 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அது வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.