டில்லி,
கடந்த 1ந்தேதி பாராளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஷேர் மார்க்கெட் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதன் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரெப்போ வட்டி வகிதத்தில் எந்தவித மாற்றமுமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2018-19ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தற்போதைய சந்தை நிலவரம், பணவீக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது.
அதில் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், ஏற்கனவே உள்ள வட்டி விகிதமான 6 சதவீதம் அப்படியே நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த 3 முறை இதுபோல ரெப்போ விகிதம் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.