தனியார் துறை வங்கிகளான ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளை பின்பற்றாததன் காரணமாக அவ்விறு வங்கிகளுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளான எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கிக்கு மத்திய ரிசர்வ் வங்கி மொத்தம் ரூ.2.91 கோடி அபராதம் விதித்துள்ளது.
வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதில் அலட்சியமாக இருக்கும் அனைத்து சிறிய மற்றும் பெரிய வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.
KYC, டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள், வாடிக்கையாளர் சேவை, வங்கியுடன் தொடர்புடைய முகவர்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இதில் KYC, டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக ஆக்சிஸ் வங்கிக்கு ரூ. 1.91 கோடியும் இரவு 7 மணிக்கு பிறகும் காலை 7 மணிக்கு முன்பும் வாடிக்கையாளரை தொலைபேசியில் தொடர்புகொள்ளக் கூடாது என்ற விதிமுறையை ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர் சேவை மையம் கடைபிடிக்காத காரணத்திற்க்காக அந்த வங்கிக்கு ரூ. 1 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.