டில்லி

புது ரூ.1000 நோட்டுக்களை அறிமுகம் செய்யும் எண்ணம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.   இந்த நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..  மீண்டும் ரூ.1000 நோட்டுக்கள் புதிய வடிவில் அறிமுகம் செய்யப்படும் என்னும் செய்தி பலராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திர காந்த தாஸ் செய்தியாளர்களிடம்,

“ரூ.500 நோட்டுகளைத் திரும்பப் பெறும் எண்ணமோ அல்லது ரூ.1,000 நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் எண்ணமோ ரிசர்வ் வங்கிக்கு இல்லை. இதுகுறித்து பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை ரூ1.80 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற அருகில் உள்ள வங்கிக் கிளைகளுக்குச் செல்லுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். அவசரப்படுவதற்கு எந்த தேவையும் இல்லை”

என தெரிவித்துள்ளார்.