டில்லி

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.  ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2000  ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். இதற்கென வங்கிகளில் சிறப்புக் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

இன்றுடன் ரிசர்வ் வங்கி வழங்கிய கால அவகாசம் முடிவடைந்த நிலையில் இந்த காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.  அதன்படி அக்டோபர் 7 ஆம் தேதி வரை வங்கிகளில் ரூ. 2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.