டெல்லி

ரிசர்வ் வங்கி ரூ. 20000 க்கு மேல் கடன் தொகையை ரொக்கமாக பெற தடை விதித்துள்ளது/

கடன் விஷயத்தில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ரொக்கமாகக் கடன் அளிக்கும் வரம்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் ரூ.20,000-க்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது என்று கூறியுள்ளது.

ரிசர்வ் வாங்கி அனைத்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு அனுப்பிய கடிததத்தில்

“ரொக்கப் பரிமாற்றத்தில் வருமான வரி விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் `வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 SS விதியின்படி, எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையைப் பணமாகப் பெற முடியாது. அதோடு எந்த ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனமும் ரூ.20,000-க்கும் அதிகமான கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது’’

எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை குறைந்த வட்டியில் தங்க நகைக் கடன், வியாபாரக்கடன், வீட்டுக் கடன்ன் போன்றவற்றை வழங்கும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனம் (IIFL Finance) ரொக்க கடன்களுக்கான சட்டபூர்வ விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது.