டில்லி

சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான கடன் சீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தொடங்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

 

இரண்டாம் அலை கொரோனா பரவால் நாட்டில் பாதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.  இதையொட்டி நாடெங்கும் பல மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது..   சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை முற்றிலுமாக முடங்கி உள்ளது.   இதனால் கடும் பொருளாதார பாதிப்பை இந்த தொழில்துறை சந்தித்து வருகிறது.

உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி உள்ள போதிலும் இந்தியாவில் இது அதிகமாக உள்ளது.  இந்த நிலையை சமாளிக்க ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அவ்வகையில் மத்திய நிதி அமைச்சகம் இது குறித்து இந்த மாத தொடக்கத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெற்றுள்ள ரூ.25 கோடிக்குக் கீழான கடன்கள் சீரமைப்பு செய்யப்படும் எனவும் இதனால் நிதி நெருக்கடியை நி?றுவனக்கள் சமாளிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது எனவும் இந்த உதவி தேவைப்படும் நிறுவனங்கள் தங்கள் வங்கிகளைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.