டில்லி:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்று வந்த தபால் சேவை நிறுத்தப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். இந்தியாவுக்கு அறிவிக்காமல் பாகிஸ்தான், அஞ்சல் சேவையை ஒருதலைப்பட்சமாக நிறுத்த முடிவு எடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளை யும் பாகிஸ்தான் நிறுத்தி உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு எழுதிய கடிதங்களுக்கான அஞ்சல் அஞ்சல் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியதாக மத்தியஅமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்து உள்ளார்.
முதன்முதலல் பாகிஸ்தான் ஒருதலைப்பட்சமாக இந்தியாவுக்கு அஞ்சல் அஞ்சல் சேவையை நிறுத்தியதாகவும், இது சர்வதேச அஞ்சல் தொழிற்சங்க விதிமுறைகளுக்கு முரணான முடிவு, என்றவர், இரு நாடுகளுக்கிடையில் தபால் அஞ்சல் சேவையை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது என்றும் விமர்சித்தார்.
இந்தியாவுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருக்கும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.